புனிதமான இழைகள்: தர்பம், கிரகணம் மற்றும் நாம் பாதுகாக்கும் உணவு
Volume 5 | Issue 11 [March 2026]

புனிதமான இழைகள்: தர்பம், கிரகணம் மற்றும் நாம் பாதுகாக்கும் உணவு
அனுராதா சௌம்யநாராயணன்

Volume 5 | Issue 11 [March 2026]

மொழிபெயர்ப்பு – டாக்டர் வி.சௌம்யநாராயணன்

உணவு என்பது நினைவு சடங்கு மற்றும் காலங்களால் நமது குடும்பத்தை ஒன்றாக இணைத்துக் காட்டும் ஒரு வழியாகும். தென்னிந்திய வீடுகளில் எவை சமைக்கப்படுகின்றனவோ எவை பாதுகாக்கப்படுகின்றனவோ எவ்வாறு எவ்வகை உணவுகள் ஏற்று கையாளப்படுகின்றனவோ, என்பவைகளை பற்றிய  நடைமுறைகளே  மத நம்பிக்கைகளுடனும்  வாழ்வியல் அறிவுடனும் பின்னிப் பிணைந் துள்ளன.  அப்படிப்பட்ட முறைகளில் கிரகண காலங்களில் உணவைப் பாதுகாப்பதற்காக தர்பம் அல்லது குஸம் என்னும் புல்லின் பயன்பாடு என்ற ஒன்றுள், தூய்மை, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அடங்கியுள்ளன.

இந்த கட்டுரையானது, சமீபத்தில் சந்திர கிரகணம் நிகழ்ந்த பொழுது, எனது குடும்பம் மீண்டும் தயாராகி தர்பத்தைச் சேகரித்து தண்ணீரில் நனைத்ததை கொண்டு எழுதப்பட்டது. ஏன் இந்த எளிய புல்துண்டு விவரிக்கவும் நினைவு கொள்ளவும் மற்றும் சிந்தித்துப் பார்க்கவும் முக்கியமாகிறது? என்பதே இம்முயற்சி. இந்த கட்டுரையானது நினைத்துப் பார்க்கவல்ல நடைமுறைகள், குடும்ப அறிவுரைகள், அண்டை அயலவர்களுடனும் கோயில் பூசாரிகளு டனுமான உரையாடல்களின் தொகுப்பாகும்.

நான் இவ்விஷயங்களை விவரித்த பெரியோர்களிடம், அவர்கள் என்ன எப்படி ஏன் செய்தார்கள் என்றெல்லாம் கேட்டேன்.  கிரகணம் ஏற்பட்டபொழுது, எங்கள் வீட்டு சமையல் அறையில், தர்பம் வைக்கப் படுவதைக் கண்டேன். இவையெல்லாம், பொதுவான கவனிப்புகள் அல்ல, இவையெல்லாம் பாசத்திலும் தற்சார்பிலும் சேர்க்கப்பட்டவை. இருந்தாலும், இவை அவசியமானவை. பண்பாட்டைச் சார்ந்த நினை வானது பெரும்பாலும் சமையலறைகளிலே வாழ்கின்றன, ஆவணங்க ளில் அல்ல.

எங்களது வீட்டில், கிரகணம் ஏற்படுவதற்கு முன்பே, கிரகண நாள் அறிவிக்கப்படுகிறது. குடும்பத்தில் ஒருவர், கிரகண தேதியை அறிவிப்பார். அமைதியாக இதற்காக தயாராகிவிடும் வீடும். திரைச்சீலைகளும், ஜன்னல்களும் இறுக்கமாக கட்டப்படுகின்றன. தண்ணீர் பாத்திரங்கள் மூடப்படுகின்றன. அருகில் இருந்தால் கோயில் பூசாரியும் அல்லது அண்டை வீட்டுக்காரர் அவர்கள் வைத்திருக்கும் தர்பத்தை கொடுப்பார்கள். சில சமயம், ஒரு காகிதத்தில் சுற்றியபடி வருகின்ற தர்பமானது, இரு பக்கமும் வலுவுடனும், அதேசமயம் நிறம் வெளுத்தும் காணப்படும்.

இந்த கிரகணத் தினத்திற்கான ஏற்பாடுகள்,  ஒரு இசைப்  பயிற்சியைப் போல அமைகிறது.  ஒருவர் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அந்த தர்பத்தின் இழைகளை நனைப்பார்.  மற்றொருவர் அந்த தர்பங்களின் இழைகளைச்  சில துண்டுகளாகக்  கிள்ளி வைப்பார்கள். ஒரு குழந்தை, ஒரு சிறிய மரத்தால் ஆன பாத்திரத்தையோ அல்லது கிண்ணத்தையோ எடுத்துக்கொண்டு சமையலறை வரைக்கும் முற்றத்திற்கும் இடையிலே ஓடிக்கொண்டிருப்பான்.  அப்போது மெதுவான குரல்கள் மற்றும் கவனமான தொனி, வீண் சத்தங்கள் இல்லாமல் கேலிகள் இருக்கும்.  ஏன் காற்று கூட இதற்குத் தகுந்தாற்  போல இருக்கும்.

குறிப்பிட்ட செயல்கள் வழக்கத்தாலும், வயதாலும் பிரித்தாளப் படுகின்றது.  ஆண்கள் கோயிலுக்குச்  சென்று தர்பத்தைச்  சேகரித்துத்  தேவையான மந்திரங்களைச் சொல்வார்கள். பெண்கள், அந்த தர்பத்தைச் சரியான இடத்தில் வைப்பார்கள். ஜாடிகளுக்குள் தர்பத் துண்டுகளை கட்டியும், மசாலா பொருட்களில் இட்டும் வைப்பார்கள்.  இந்தச் சடங்கைச் சார்ந்த வேலையைச்  சமமாகப்  பங்கிட்டு, ஒரு வழியில் அறிவைக் கொண்டு செல்லுதல் ஆகும் எப்படி என்றால் பார்த்துக் கொண்டே சிறுவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். அதையே பார்த்துக் கொண்டு இருப்பதால் உள்வாங்கிக் கொள்கிறார்கள்.

ஒருமுறை ஊறியதாலேயே, அந்த தர்பம் மென்மையாகிறது, கூர்மையான  பக்கங்கள் கைவிரல்களைக்  கிழிக்க வாய்ப்பு குறைந்து விடுகிறது. மேலும், அந்த தர்பம், நொறுங்கும் தன்மை கொண்டிருந்தா லும், வளைந்து கொடுக்கும் மென்மையை அடைகிறது. சிறு துண்டு களாக்கிய இவைகளை, உப்பு, புளி, மிளகாய், நல்லெண்ணெய், நெய் பாத்திரங்களில் இடுவர். மெல்லிய தர்ப்ப இழைகளை,  அப்பளங் களுக்கு அடியிலும், மண் மற்றும் பித்தளைப்பாத்திரங்களின் வாய்ப் பகுதியின் குறுக்கே நீண்ட தர்பங்களையும் கட்டுவார்கள். நுண்ணுயிர்த்தன்மை கொண்ட தயிர் மீது, அது வீட்டின்  அறையில் ஒரு இருட்டு மூளையில் வைப்பதற்கு முன், ஒரு தர்பத் துண்டை இடுவார்கள்.

பெரியோர்கள் தர்பம் ஒரு தடுப்பானாக உருவாகிறது என்று விளக்குகிறார்கள். ஒரு புல் என்று சொல்லப்படும் தர்பம், கிரகணங் களால் ஏற்படும் தாக்கங்களிலிருந்து, உணவைக் கவசமாக மாறி, உணவில் உள்ள முக்கியமான பிராண-சக்தியைக்  குறையாதவாறு தடுத்துக் காக்கிறது. மொழி மென்மையானதாகவும் சுருக்கமாகவும் கையாளப்படுகிறது. இந்தப் புல், கிரகணத்துடன் சண்டையிடாதாயி னும், அதற்கு மாறாக எது வாழ்க்கையைத் தக்க வைக்குமோ, அதைப் பாதுகாக்கிறது.

நான் குழந்தையாக இருந்த பொழுது, இந்த தர்பம், எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும், ஒருமுறையது அசாதாரணமாக ஆகிவிடு  கிறது என்று, எனக்குத் தோன்றியது.  ஒரு பசும்புள், உள்ளே இடும் வரை, அந்தப் புளி இருக்கும் ஜாடி, மிகச் சாதாரணமாக தெரிகின்றது. தர்பத்தின் இருப்பு, அந்த ஜாடியை ஒரு பாதுகாப்பின் கீழ் உள்ள பொருளாக மாற்றிவிடுகிறது.

டெஸ்மோஸ்டச்யா பிபின்னடா என்ற தாவரவியல் பெயர் கொண்ட தர்ப்பம் அல்லது குஸம், ஒரு திடமான புல்வகையாகும். பொதுவாகக் கோயில்களிலும், புல் சார்ந்த இடங்களிலும், தர்பம் காணப்படும். திடமாயும் கூர்மையான பக்கங்களையும் கொண்ட இந்த தர்பம், விரைவான சிதைவை எதிர்க்கும். ஆயுர்வேதத்தில் மற்றும் இனத்தாவரவியலில், தர்பம் என்பது, குளிரூட்டியாகவும், இரத்தக் கசிவு மற்றும் வீக்கங்களைப் போக்கவும் உபயோகப்படுகிறது. இந்தத் தாவரம், ஒரு மேம்பட்ட அடையாளம் கொண்டது, தியானம் செய்ய ஆசனமாகவும், விரலில் மோதிரம் அல்லது பவித்திரம் என்று அணியக்கூடியதாகவும், வேள்விச் சமயங்களில், வேள்வித் தீயில், ஆஹுதியாகவும் இடப்படுகிறது.

இனத் தாவரவியல், நுண்ணுயிரியல் என்ற நவீன பாடங்களில், சில பல தாவரங்கள், பாக்டீரியாக்களுக்கு எதிர்த் தன்மையைக்  கொண்டவைகளாக, மரபு வழி நடைமுறையில்,  உபயோகப்படுத்து வதைச் சுட்டுகின்றன. துளசி வேம்பு என்ற இரண்டும் புகழ்வாய்ந்த உதாரணங்கள். தெளிவற்ற மற்றும் உறுதியற்ற ஆதாரத்தைக் கொண்டிருந்தாலும், தர்பமும் கூட ஆரோக்கியத்துக்கும் பாதுகாப் பிற்கும், பயனளிக்கவல்லது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப்  பாத்திரங்களில், தர்பத்தை இடுவதால், அதன் வேதியியல் தன்மை,  சிறிதளவாயினும், கிரகணகாலங்களில் உணவுகளை மூடுவதாலும்,  தொடாமல் இருப்பதாலும், நிச்சயமாகக் கெடாமலும், பூச்சிகளால் அண்டப்படாதிருப்பதாலும், உண்மையாகக் காக்கும் தன்மையைச்  சாதாரணமான நடைமுறையைக் காட்டுகிறது.

கிரகணங்களின் கதிர்வீச்சு தாக்கத்தைச் சொல்லும் பெரியோர் கள், நவீன-பௌதிகப் பொருட்படக் கூறுவதில்லை. கிரகண காலங்களில், பிரபஞ்சத்தின் தாங்கும் சக்தி, மாறுபட்டுக் கீழே இருக் கும் உலகைத் தாக்கும், இந்தப் பிரபஞ்சவியலிலேயே, தர்பத்தை உபயோகித்தோ, ஜாடிகளை மூடி வைத்தோ, புதியதாக உணவுகளைச்  சமைக்காமலோ, சாப்பிடாமல் இருப்பதோ, ஒரு உணவைப்  பாதுகாக்கக் கூடுதலாக முயற்சியெடுத்து, நடைமுறை வழக்கம் உரு வாகிறது. வேறு எதுவும் இல்லை என்றால், அப்பொழுது உணவைச்  சார்ந்திராமலோ, உணவை அப்படியே விட்டு விட்டோ,  வேறொன்றில் கவனம் செலுத்தியோ, விரதம் இருந்தோ, தூங்கியோ, வீடுகளில் எல் லோரும் உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.

பலவிதமான நிகழ்வுகளில் நடைபெறும் சடங்குகள். இது கவனக்குறைவு-கெடுதலைத் தடுக்கிறது. இது, கூட்டுச் சுகாதாரத்தை வீடுகளில் நடைமுறைப்படுத்த ஒரு நிறுத்தத்தைக்  கட்டாயப்படுத்து கிறது. மக்கள் ஆசைப்பட்டு, இதை ஒரு பாதுகாப்பான செயல் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது, பொருத்தமாகிறது.

எனது குழந்தைப் பருவ நினைவு ஒன்று எதிர்ப்பு தெரிவிக்கும் செயலைச் சேர்க்கிறது. ஒரு கிரகணசமயத்தில், எனது ஆர்வத்தைக்  கட்டுப்படுத்தமுடியாமல், நான் சத்தம் போடாமல், ஜன்னல் அருகே சென்று, எனது முகத்தை ஜன்னல் கம்பியில் அழுத்தி, மங்கிய நிலவினைப் பார்க்கச் சென்றேன். எனது பாட்டி, அதைக் கண்டு, எனது கையை மெல்ல எடுத்துக்கொண்டு, என்னைச் சமையலறைக்கு அழைத்துச் சென்று, தயிர்ப் பாத்திரத்திலிருந்த, ஒரு தர்பத்தைக்  காட் டினார். அவள், என்னைக் கடுமையாகத் திட்டவில்லை, மாறாக சங்க டமான தருணங்களில், இந்த தர்மம்,  எவ்வாறெல்லாம் தேவைப்படுகிறது என்ற கதையைச் சொல்வாள். கிரகணத்தின் சாயங் காலத்தில், எங்கள் குடும்பமே குளிப்பதற்குக் காத்துக் கொண்டிருக் கையில், அவர் அமைதியாக, ஸ்லோகங்களை உச்சரித்துக் கொண்டு, ஒவ்வொரு தர்பத்தையும் அகற்றுவார். இது ஒரு காணமுடியாத அவிழ்ப்பதும் விடுப்பதுமான செயல்பாடு.

அந்தச் சபதம் சிறியதும், வீட்டைச் சார்ந்ததுமாகும்.  சகிப்புத்தன்மையும் சமூகக் கட்டுப்பாடும் எப்படி ஒரு சடங்கு ஒழுங் கில் காட்டப்பட்டுள்ளது என்பதைக்  கற்பிக்கவல்ல பாடமாக அமை கிறது. கிரகணத்திற்குப் பிறகு, முதல் உணவு, சிறிய கொண்டாட் டத்துடன் ருசிக்கப்படுகிறது. ஏனெனில் குடும்பத்தார்கள், காத்திருத்தல் மற்றும் புனிதமடைதல் என்னும் சோதனைக்கு ஆளாகின்றனர்.

கிரகணங்களின் பொழுது, தென்னிந்தியா, நுட்பமான நடைமுறை களால் செம்மாந்திருக்கிறது. தமிழ்நாட்டில், தர்பமானது, புளி-ஜாடிக ளில் இட்டும், எண்ணெய்ப் பாத்திரங்களில் கட்டியும் காணப்படுகிறது.  கேரளாவில், உணவு, வாழை இலைகளைக் கொண்டு மூடப்படுகிறது.  தூய்மைப்படுத்த குளியலும் மேற்கொள்ளப்படுகிறது.  ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும், ஊறுகாய்கள், பாதிப்புக்கு உள்ளாகிவிடுமோ என்று கவனத்துடன் கண்காணிக்கப்படுகின்றன. கர்நாடகப் பகுதிகளில், கிணறுகளும், தண்ணீர் பானைகளும், தர்பத்தையோ அல்லது பாதுகாக்கும் மற்ற பொருள்களையோ கொண்டுள்ளன.

வட இந்தியா மாறுபட்ட முறையைக் கொண்டுள்ளது. துளசி இதழ்களும், பிரார்த்தனையும், தர்பத்தின் இடத்தை எடுத்துக் கொள் கின்றன போலும். சில சமூகங்களில், சமைத்த உணவுகள் முற்றிலு மாக அப்புறப் படுத்தப்படுகின்றன. கிரகணத்திற்குப் பிறகு, புதிதாகச்  சமையல் செய்யப்படுகின்றது.  கடற்புரத்து மீனவர்கள்,  கிரகணங் களின் பொழுது, கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர்.  உள்ளூர்ச்  சூழலில், எது சட்டெனத் தயாராகக் கிடைக்கின்றதோ, அதை ஏற்றுக் கொள்ளும் சடங்குகள், ஒரு பன்முகத்தன்மையை நினைவுறுத்து கின்றன.  மாறுபட்ட பவித்திரமான தாவரங்கள்,  அந்தந்த இடங்க ளுக்குச் சார்ந்த, காக்கும் விதத்தைச் சமமாக நிறைவேற்றுகின்றன.

உலகம் முற்றிலும், நாகரிகங்கள் கிரகணத்தை முன்னெச்சரிக் கையுடன் செயல்படுத்துகின்றன. அதில், பல முன்னெச்சரிக்கைகள்,  உணவினைச் சார்ந்தவை. பழைய சீனர்கள், கிரகணத்தை ஒரு கொண் டாட்டமாகவும், பயங்கர பாதிப்பாகவும் குறிப்பிடுகின்றனர்.  சாதாரண மாகச் சாப்பிடும் வழக்கத்தையும் நிறுத்தி விடுகின்றனர். மெஸபொ-டோனியாவைச் சேர்ந்த பூசாரிகள், கிரகணங்கள் அரசர்களுக்குச்  சகுனங்களாகவும், அரசாங்கத்தைச் சுற்றி, முன்னெச்சரிக்கையையும் எடுக்கின்றனர். லத்தின் அமெரிக்கப் பகுதிகளில், கருவுற்ற பெண்கள்,  கிரகணத்தின் போது, கருவைப் பாதுகாக்க, வெளியில் செல்வதைத்  தவிர்க்கின்றனர். மத்திய யூரோப்பிய மக்கள், கால்நடைகளைச்  சார்ந்த கவலைகளுடனும், பயிர்களைச் சார்ந்த பயத்தோடும், கிரக ணங்களின் தாக்கங்களைப் பிணைகின்றனர்.

இதுபோன்ற இணையான கருத்துகள், கிரகணத்தை ஒரு தெய் வீக-நாடக-நிகழ்வாகவும், வாழ்வாதாரத்தையும், உடலைப்  பாதிக்கும் விஷயமாகவும், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்துகின் றன. சூரியன் அல்லது சந்திரன் இவ்வாறு ஆகாயத்தில் மாறி மாறி கிரகணங்களுடன் நிலவி உலவி வரும் பொழுது,  உணவும், அவ் வுணவைத் தயாரிப்பவர்களும், அதைச் சாப்பிடுபவர்களும், சமூக அக்கறையுடன் நோக்கப்படுகின்றனர்.

நிறைய வீடுகளில், தர்பங்கள், அமைதியாக வைக்கப்படுவ தில்லை. தர்பம், வார்த்தைகளான சிறு பிரார்த்தனையுடனும்,  வேண் டுதல்களுடனும், சாதாரண மந்திரங்களுடனும் சேர்ந்தே காணப்படு கின்றன. இவை, வேதமந்திரங்களை, எப்பொழுதும், விவரிப்பதில்லை.  நிறைய இடங்களில், இவைச் சுருக்கமாயும், பயன் கொண்ட வேண்டு தல்களையும் கொண்டவை. உணவைக் காக்கவும்,  குடும்பத்தைக்  காக்குமாறு தெய்வத்தை வேண்டியும், முன்னோர்களின் ஆசீர்வாதங் களை வேண்டியும், தர்பங்கள் வைக்கப்படுகின்றன. கோவில்களில்,  பூசாரிகள்,  தர்பங்களைக்  கிள்ளும் பொழுதும், கொய்யும் பொழுதும்,  கொடுக்கும் பொழுதும், அவைகளில் தெய்வீகம் இருக்க,  வழக்கமான மந்திரங்களைச் சொல்வார்கள்.  இந்த மந்திரப் பேச்சுகள், அந்த தர்பத் தை வலுவூட்டுகின்றன. தர்ப்பம், ஒரு தடுப்பறண்  மட்டு மல்லாது, மந்திரங்களால், தெய்வீகத் தன்மையுடன் செறிவூட்டப்படு கின்றன.

தர்பத்தைச் சுற்றிய மந்திரங்கள் சிறப்பானவை. ஏனெனில், எப் படி வைக்க வேண்டும்? எவ்வளவு நேரம் அதை விட்டு வைக்க வேண் டும்? எப்படி நீக்க வேண்டும்? என்று இந்த தர்பம்,  வாய்மொழியான பண்பாட்டைக் காட்டுகிறது. இந்த நெறிமுறைகள், தலைமுறைகளை யும் தாண்டி ஒத்த-இசையுடன், இந்தச் செயல்முறைகளைக்  கூட்டிப் பிணைக்கிறது. கோவில்களுக்கு அருகில், தர்பங்கள்,  வியாபாரிக ளால், விற்கப்பட்டோ, பக்தர்களுக்காகக் பூசாரிகளால்,  தரப்பட்டோ, கிடைக்கின்றன. தர்பக்கட்டுங்கள், சிறிய நகரங்களில்,  கோயில்-படி களில் வைக்கப்படுகின்றன. பெரு நகரங்களில், யாத்திரிகர்கள், சிறிய தான, தர்பக்கட்டுகளை, வீட்டுக்கு எடுத்துச் செல்வர்.  வயல்களில் இருந்து கோயில்களுக்கும், கோயில்களில் இருந்து வீடுகளுக்கும்,  தர் பம் வழங்குதல் உள்ளூர் பொருளாதாரச் சந்தையில்,  இந்தப் பவித்தி ரமான தாவரம் இணைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. புல்வெளி களில் இருந்து, தர்பங்களைச் சேகரிப்பவர்கள், பண்பாடு மற்றும் பொருட்களின் உபயோகத்தையும் கொண்ட சேவையைச் செய்கின் றனர்.

இந்தப் பண்டமாற்றம், நிலைத்தன்மையைப் குறித்து வினாவை  எழுப்புகிறது. சில இடங்களில், விழாக்காலத்தில், அதிகமாக உள்ளூர்த் தாவரங்களின் கட்டாயத் தேவையைப் பொருத்து, இந்த தர்பங்கள்,  அறுவடையாகின்றன. இன்றைய கால உரையாடல்களின் படி,  தர்பங் களின் நிலைத்தன்மையான அறுவடை, புனிதமான தலங்களில்,  பணிபுரியும் சமூகம், வழங்கல் நெறிமுறைகளைக் குறித்த வினாக்கள் எழுகின்றன. சடங்கு-முறைகளும், சுற்றுச்சூழலின் நிலைத்த  தன்மையும், எப்படி நம்மால் பராமரிக்கப்படக்கூடும்?

சடங்குப் பணிகளில், பாலினப் பாகுபாடுகளைப் பற்றிய கவனம்,  வேறொரு நோக்கில் தேவைப்படுகிறது. நிறைய வீடுகளில், ஆண்கள் கோயில்களில் இருந்து, தர்பங்களை வாங்கி வருவார்கள். பிறகு,  அதற்கான மந்திரங்களைச் சொல்வார்கள். பெண்கள்,  தர்பங்களைத்  தயார்ப்படுத்திச் சமையலறையில் வைப்பார்கள். வேறு சில இடங் களில், பெண்கள் உணவையும், தண்ணீர் நிலைகளையும், பாதுகாக்கும் சடங்குகளைச் செய்வார்கள். இந்தப் பாகுபாடு உலகளாவியது இல்லை என்றாலும், புனிதமான பொருட்கள் தினசரி பொறுப்புகளுடன் எப்படி இணைந்துள்ளன என்பதைத் தெரிவிக்கின்றது. யார் புனிதப்  பொருட்களைக் கையாள்வது? கோயிலுக்கும் வீட்டுக்கும் நடுவே யார் பணிபுரிவார்? சடங்குகளில், சமூக-உறவுகளும், தினசரி செயல்பாடு களின் ஊடே பரம்பரை எப்படி காக்கப்படுகின்றன? என்று இந்தக்  கேள் விகள் தெரிவிக்கின்றன.

சுற்றுப்புறம் மற்றும் சமூகமயநோக்கில் பார்த்தோமேயானால்,  கிரகண காலங்களில், தர்பத்தின் உபயோகம், பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பை உணர்த்துகிறது. உப்பு, புளி, அப்பளம், நெய் போன்ற அத் தியாவசிய உணவுப்பொருள்களைப் பாதுகாப்பது, வீடுகளில் முக்கிய மான பணியும்,  திட்டமிடத் தேவையுமாகும். இவைகள் வீணாவதைக்  குறைக்கவும், அதையே கவனமாகத் தொடரவும், காக்கும் உபாயங்க ளாகச் சடங்குகள் அமைகின்றன. தர்பம், சிறு துரும்புதான் ஆயினும்,  ஜாடியில் உள்ள ஊறுகாய்களின், வேதியியல் தன்மையை மாற்றா விட்டாலும், குடும்பம், தான் சேகரித்துள்ளதை நன்றாகப் பாதுகாக்கும் அளவிற்கு, கவனம் இன்மையால், கெட்டுப் போவதைத் தவிர்ப்பதற்கும், கிரகணங்களின் இடையே, உணவு, நியாயமான முறையில், உபயோகப்படுத்துவதையும், சடங்குகள் உறுதிப்படுத்து கின்றன.

நகர்ப்புற வாழ்க்கையில், குளிரூட்டிகள், பொட்டலப் பொருட்கள்,  மாற்றம் கொண்ட சமூக முறைகள் போன்றவைகளுடனான காரணங் களால்,  சடங்குமுறை மங்கி விடுகிறது.  இளைஞர்கள் இந்தக்  கிர கண முறைகளை விசித்திரமாகவும் மூடநம்பிக்கையாகவும் பார்க்கின் றனர். மேலும் நினைவு நீடிக்கிறது, ஊறுகாய் ஜாடிகளில் போடப்பட்ட தர்பத்தின் உருவம், உரையாடல்களையும் குடும்பத்தின் நினைவுகளை யும் தொடரச் செய்கிறது.

புலம்பெயர்ந்த சமூகங்களுக்கு, இந்த காட்சி, பிரதேசங்களின் தனக்கே உரித்தான தன்மையையும், அயல்நாட்டுச் சமையலறை களிலும், தன் சொந்த நாட்டின் அடையாளத்தையும் நிலைநாட்டுகிறது.   இந்தச் செயல்பாடுகள் மங்கினாலும், அதனுடைய போதனைகளை அழிக்கவில்லை. பராமரிப்பின் ஒழுங்கு, அக்கறை மற்றும் கவனம் ஆகியவை, உபயோகமான கண்ணாடியில் மூலம், உணவு வீணாகு தலின் நவீன நெருக்கடிகளும் நிலையற்ற நுகர்வையும் காணலாம்.

இன்று, தர்பங்களுடைய உபயோகங்களின் ஆதாரமான தர்க்கம் என்னவென்றால், அக்கறையுடன் பராமரிப்பு, சேகரிப்பதில் கவனம்,  சமூகங்களுடன் ஒத்துழைப்பு, புதிய தொடர்பினைக் கொண்டுள்ளது.  காலநிலை மாற்றம், அறுவடைச் சுழற்சியை, இடையூறு செய்கிறது.  வழங்கல் சங்கிலிகள் பாதிப்புக்குள்ளாகின்றன. உணவை வீண் செய் வது உலகளாவிய விஷயமாகும். தர்பம் ஸம்பந்தமான சடங்கின் நீதியானது, முக்கிய உணவுப் பொருட்களின் மதிப்பைக் கூட்டுகிறது,  வீணாவதைத் தவிர்க்கிறது, பராமரிப்பையும் சற்றே செயல்படுத்து கிறது, மீள்-திறனின் ஒரு வட்டார மாதிரியை வழங்குகிறது. மனோ தத்துவ கூற்றைத் தழுவாமல் போனாலும், இடைநிறுத்தம் செய்யும் சமூகப்பழக்கம், பாதுகாத்தல், உணவைப் புதுமைப்படுத்துதல், நிலைப் படுத்துதல் என்பதற்கான குறைந்த தொழில்நுட்ப-உபாயங்களை, ஆராயத்  தகுதியாகிறது.

பிரதேசங்கள் தோறும், தர்பம் புராணத்தில் பொதிந்துள்ளது.  துறவிகள், தர்பத்தை ஆஸனமாக அமைத்து, தெய்வீக தரிசனத்தைப்  பெறுதல், தெய்வங்களுக்கென, துறவிகள், தர்பத்தின் புனிதத்  தன்மையைத் தேர்ந்தெடுத்தல், போர்க்காலத்தின் போது, அரசர்கள், புனிதமான தர்பாஸனத்தினால் காப்பாற்றப்படுகின்றனர் என்று கதை கள் சொல்கின்றன. இந்தக் கதைகள், செயல்முறைக்கு வழிவகுக்கின்றன. ஒரு புல் என்பது, வெறுமனே ஒரு செயல் சார்ந்ததல்ல, வழிவழியான தெய்வீகத்தில் பங்குகொள்கிறது, பெரியவர்கள், சமையலறைகளிலே இந்த கதையைச் சொல்லும் பொழுது, தர்பம், அக்கறை மற்றும் பாதுகாப்பினை விவரிக்கும் பெரிய பங்கைக் கொண்டுள்ளது.

இறுதியாக நான், தயிற் கிண்ணத்தில் உள்ளே ஒரு புல்துண்டை  இடுதல் சிறியதாயினும், அதைக் கொண்டு, குடும்பத்தை எப்படிக் காக்க வேண்டும் என்று தெரிந்தவர்களின் நிலையான செயல்பாடு களை, மறுபடியும் சிந்திக்கிறேன். பிரபஞ்ச-ஒளியை, இந்த தர்பம், மாற்றாமல் போனாலும், இது நம்மை, நடைமுறையில்,  அக்கறை யுடன் இருக்கச்சொல்கிறது,  கவனத்துடன் இருக்கச் சொல்கிறது, நாம் ஞாபகம் வைத்துக்கொள்கிறோம் என்கின்ற நம் வாழ்க்கையை நடத் திச்செல்கிறது,  என்பதாக, நம்மைப் பல விதத்தில் மாற்றுகிறது.  இந்த உடனடி நுகர்வுயுகத்தில், இந்த அளவிடப்பட்ட செயல்பாடுகளின், அக்கறையானது,  விசித்திரமான சின்னங்கள் இல்லையாயினும், நாம் உண்ணும் உணவையும், அதை நாம் பதப்படுத்தும் விதத்தையும், மறு படி நினைத்துப் பார்க்க, ஒரு அழைப்பாக அமைகின்றது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

oneating-border
Scroll to Top
  • The views expressed through this site are those of the individual authors writing in their individual capacities only and not those of the owners and/or editors of this website. All liability with respect to actions taken or not taken based on the contents of this site are hereby expressly disclaimed. The content on this posting is provided “as is”; no representations are made that the content is error-free.

    The visitor/reader/contributor of this website acknowledges and agrees that when he/she reads or posts content on this website or views content provided by others, they are doing so at their own discretion and risk, including any reliance on the accuracy or completeness of that content. The visitor/contributor further acknowledges and agrees that the views expressed by them in their content do not necessarily reflect the views of oneating.in, and we do not support or endorse any user content. The visitor/contributor acknowledges that oneating.in has no obligation to pre-screen, monitor, review, or edit any content posted by the visitor/contributor and other users of this Site.

    No content/artwork/image used in this site may be reproduced in any form without obtaining explicit prior permission from the owners of oneating.in.